ADVERTISEMENT

அமீரகத்தில் அடுத்த வாரம் முழுவதும் வானிலை எப்படி இருக்கும்? முழு விபரம் இதோ.!!

Published: 27 Mar 2026, 12:49 PM |
Updated: 27 Mar 2026, 12:49 PM |
Posted By: admin

அமீரகத்தில் இந்த வாரம் முழுவதும் நிலையற்ற வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அமீரகம் முழுவதும் உள்ள பகுதிகள் பலத்த காற்றுடன் புயல்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு, மழை, இடி, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழை என இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரேபிய வளைகுடாவில் வழக்கமாக காணப்படும் பிரகாசமான, வெயில் நிறைந்த மற்றும் தெளிவான வானிலைக்கு முற்றிலும் மாறாக, இந்த இருண்ட வானமும் பலத்த காற்றும், மழையும் இயல்பு வாழக்கையை பாதித்தாலும், அவ்வப்போது நிகழும் இது போன்ற காலநிலையை ஒரு சில குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அனுபவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், வரும் வாரம் முதல் மிதமான காற்று, பிரகாசமான வானம் மற்றும் உயரும் வெப்பநிலையுடன், அமீரகம் ‘இயல்பு நிலைக்கு’ மிக விரைவில் திரும்பவுள்ளது. இருப்பினும் அடுத்த வாரத்தின் நடுப்பகுதியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பினும், தற்போது காணப்பட்ட தீவிர அளவில் மழையின் பாதிப்பு இருக்காது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வரவிருக்கும் வாரத்திற்கான முழுமையான வானிலை முன்னறிவிப்பு இதோ:

சனிக்கிழமை

நிலைமை மேம்படும், பகுதியளவு வெயிலுடன், குளிர்ச்சியான, இதமான காற்று வீசும். சனிக்கிழமையில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அதிகபட்ச வெப்பநிலை: 25°C | குறைந்தபட்ச வெப்பநிலை: 19°C

ஞாயிறு

இனிமையான மற்றும் நிலையான வானிலை நிலவும், பெரும்பாலும் வெயில் அடிக்கும் மற்றும் லேசான காற்று வீசும். வெப்பநிலை அதிகபட்சம் 26–27°C ஆகவும் குறைந்தபட்சம் 19–20°C ஆகவும் இருக்கும்.

ADVERTISEMENT

திங்கள்

வெப்பமான மற்றும் பகுதியளவு வெயில் அடிக்கும். திங்கள்கிழமை வறண்ட வானிலை தொடரும். வெப்பநிலை பதிவு அதிகபட்சம்: 28°C | குறைந்தபட்சம்: 20°C

செவ்வாய்

செவ்வாய்கிழமையும் சற்று வெப்பமான நாளாக இருக்கும். பெரும்பாலும் வெயில் அடிக்கும். ஆனால் லேசான மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும். அதிகபட்ச வெப்பநிலை: 29°C, குறைந்தபட்ச வெப்பநிலை: 21°C

புதன்

லேசான நிலையற்ற தன்மை மீண்டும் திரும்பும். இந்த நாளில் வெயிலும் மேகமும் கலந்த வானிலை நிலவும் என்பதால் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. ஆனால் தற்போதைய மழை போல் தீவிரமாக இருக்காது. வெப்பநிலை அதிகபட்சம்: 29–30°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21°C ஆகவும் இருக்கும்.

வியாழக்கிழமை

வெப்பம் அதிகரித்து வறண்ட வானிலை நிலவும். வெயிலுடன் கூடிய வெப்பம் வியாழன் முதல் அதிகரிக்கத் தொடங்கும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 31–33°C வரை இருக்கும், அதுவே குறைந்தபட்ச வெப்பநிலை: 22°C ஆக இருக்கும்.

வெள்ளிக்கிழமை

குறிப்பிடத்தக்க அளவு வெப்பம் அதிகரிக்கும் வானிலை: பெரும்பாலும் வெயிலுடன் கூடிய கோடைக்காலம் நெருங்குவதற்கான அறிகுறிகள் காணப்படும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 34–35°C ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23°C ஆகவும் இருக்கும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil WhatsApp Channel