ADVERTISEMENT

UAE: ஃபுஜைராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவருக்கு லேசான காயம்..

Published: 15 Mar 2026, 3:50 AM |
Updated: 15 Mar 2026, 3:50 AM |
Posted By: admin

ஃபுஜைரா பெட்ரோலியம் தொழிற்சாலைகள் மண்டலத்தில் வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறிக்கப்பட்ட பின்னர், உடைந்த பாகங்கள் விழுந்ததால் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஃபுஜைரா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த விபத்தால் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதே போல் நேற்று (சனிக்கிழமை) துபாயின் மைய பகுதியிலுள்ள ஒரு கட்டிடத்தின் முகப்பில் வான் பாதுகாப்பு அமைப்பால் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட ட்ரோனின் உடைந்த பாகங்கள் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த சம்பவத்தின் போது தீ விபத்து ஏற்படவில்லை என்றும் மேலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன என்றும், மேலும் சரிபார்க்கப்பட்ட புதுப்பிப்புகளுக்கு பொதுமக்கள் அதிகாரப்பூர்வ சேனல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT