ஐக்கிய அரபு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பல அரபு நாடுகளின் எல்லையை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்கள், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இராணுவ முன்னேற்றங்கள் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் அவற்றின் தாக்கம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகின்றது.
இந்த அழைப்பின் போது, மோதல்கள் விரிவடைவதைத் தவிர்க்க இராணுவ செயல்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு ஷேக் முகமதுவும் புதினும் அழைப்பு விடுத்தனர். பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகின்றது.