ஈரான்-அமெரிக்கா,இஸ்ரேல் இடையே மோதல்கள் மிகவும் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரானின் காவல்படை தளபதி முக்கிய கடல்வழி பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாகவும், இந்த பாதையை கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலையும் ஈரான் சுட்டு வீழ்த்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாதை பயன்படுத்துவது நிறுத்தப்பட்டால் உலகளாவிய எண்ணெய் ஓட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கை அடைத்து, கச்சா எண்ணெய் விலையை கடுமையாக உயர்த்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.
பெட்ரோலிய உற்பத்தி நாடுகள், திறந்த கடற்பகுதியை அடைவதற்கான ஒரே வழி ஹோர்முஸ் நீரிணை பாதையாகும். உலகில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் 20% இந்த பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றது. எனவே வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை இந் நீரிணை, மிகவும் முக்கியத்துவம் கொண்ட ஒன்றாகும். இந்நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு உலகளவில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.