ADVERTISEMENT

அமீரகத்தில் கனமழை: அதிக மழைப்பொழிவை கண்ட பகுதிகள்..

Published: 26 Mar 2026, 8:46 AM |
Updated: 26 Mar 2026, 8:46 AM |
Posted By: admin

தொடர்ந்து பெய்து வரும் மழையால், ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என்றும், கடலோர மற்றும் மலைப்பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துள்ளது என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி செவ்வாய்க்கிழமை, மார்ச் 24, 2026 அன்று அதிக மழைப்பொழிவு பதிவான முதல் 5 இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை:

  • தாஸ் ஐலாண்ட் : 47.9 மி.மீ
  • தய்யினா ஐலாண்ட் : 39.7 மி.மீ
  • ஜெபல் மெப்ரா: 33.3 மி.மீ
  • ஜெபல் யானாஸ்: 31.6 மி.மீ
  • அபுதாபி கார்னிச்: 28.3 மி.மீ

இதனை தொடர்ந்து நேற்று (புதன்கிழமை) ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பல பகுதிகளில் பலத்த காற்றைத் தொடர்ந்து தீவிரமான மழைப் பொழிவுகளை கண்டது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இருந்தபோதிலும் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல் வாகன ஓட்டிகளும் சாலைகளில் செல்லும் போது கவனத்துடன் ஓட்டுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கனமழையானது வெள்ளிக்கிழமை வரை எதிர்பார்க்கப்படுவதால், தொடர்ந்து நிலையற்ற வானிலை நிலவும் என தேசிய வானிலை மையம் (NCM) கணித்துள்ளது.

ADVERTISEMENT