ADVERTISEMENT

அமீரகத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்காக சிறப்பு விமான சேவையை அறிவித்த DGCA.!!

Published: 2 Mar 2026, 7:13 PM |
Updated: 2 Mar 2026, 7:19 PM |
Posted By: admin

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதலை தொடர்ந்து அமீரகத்தில் விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (DGCA), நாட்டின் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட பயணிகளை வெளியேற்ற சிறப்பு விமானங்களை இயக்குவதாக இன்று மார்ச் 2ம் தேதி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், விமான நிலையங்களில் நெரிசலைத் தவிர்க்கவும், சீரான செயலாக்கத்தை உறுதி செய்யவும், விமானப் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பயணிகளை, அந்தந்த விமான நிறுவனங்கள் தொடர்பு கொண்டு அவர்களின் விமான நேரங்கள் மற்றும் விவரங்கள் குறித்து அறிவிக்கப்படும் வரை விமான நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

அமீரத்கதில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கான சிறப்பு விமானங்களை இயக்குவது தொடர்பாக விமான நிறுவனங்களால் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவது நடைமுறைகளை எளிதாக்குவதிலும், ஒழுங்கான செயல்பாடுகளைப் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் பயணிகளுக்கு GCAA வலியுறுத்தியது.

ADVERTISEMENT

அதன்படி, துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) மற்றும் துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் – அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் (DWC) ஆகியவற்றிலிருந்து, இன்று மார்ச் 2, 2026 திங்கட்கிழமை மாலை முதல் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று துபாய் சர்வதேச விமான நிலையங்கள் அறிவித்துள்ளன.

எனவே, விமான சேவை பாதிப்புக்குள்ளான பயணிகள் தங்கள் விமானத்தின் புறப்படும் நேரத்தை உறுதிப்படுத்த, சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் அவர்களை தொடர்பு கொள்ளப்படாவிட்டால், பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்று துபாய் விமான நிலையங்கள் கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel