அமீரகம் முழுவதும் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகள், மழலையர் வகுப்புகள், மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்கு, வரும் ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை வரை தொலைதூரக் கற்றல் தொடரும் என அமீரகத்தின் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையானது அனைவரின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்கிறது என்றும், நிலைமை வாரந்தோறும் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
அதிகாரிகளிடமிருந்து வழிகாட்டுதலுக்காகப் பள்ளிகள் காத்திருந்த நிலையில், தொலைதூரக் கற்றல் முதலில் ஏப்ரல் 3, வெள்ளிக்கிழமை அன்று முடிவுக்கு வரும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலை காரணமாக தொலை தூரக் கல்வி முறை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது