மத்திய கிழக்கில் கடந்த மூன்று வாரங்களாக ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையே நிலவும் போரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துகள் மீதான ஈரானின் பதில் தாக்குதலும் தொடர்ந்து வருகிறது.
இதனிடையில், இன்று மார்ச் 19ம் தேதி ஈரானிலிருந்து வந்த 7 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 15 ஆளில்லா விமானங்களையும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகள் மீது ஈரானின் அப்பட்டமான தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படைகள் இதுவரையிலும் 334 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், 15 குரூஸ் ஏவுகணைகளையும் மற்றும் 1,714 ஆளில்லா விமானங்களையும் வெற்றிகரமாக இடைமறித்துள்ளன.

மேலும் இந்த தாக்குதலில் இதுவரை மொத்தம் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, சூடான், எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஈரான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, அஜர்பைஜான், யேமன், உகாண்டா, எரித்திரியா, லெபனான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொமோரோஸ், துருக்கி, ஈராக், நேபாளம், நைஜீரியா, ஓமன், ஜோர்டான், பாலஸ்தீனம், கானா, இந்தோனேசியா, ஸ்வீடன் மற்றும் துனிசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel