ADVERTISEMENT

அமீரகத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஆயுதப்படை வீரர்கள் 2 பேர் மரணம்..

Published: 10 Mar 2026, 4:00 AM |
Updated: 10 Mar 2026, 4:04 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் திங்கட்கிழமை, (மார்ச் 9, 2026) அன்று நாட்டில் தங்கள் தேசிய கடமையைச் செய்யும்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து ஆயுதப்படைகளைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகம் இரண்டு தியாகிகளின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது, எல்லாம் வல்ல இறைவன் அவர்களை தனது பரந்த கருணையால் சூழ்ந்து, அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு பொறுமையையும் ஆறுதலையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறது.

இவர்களின் தியாகத்திற்கு அமீரகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல் கத்தார், குவைத் உள்ளிட்ட அண்டை நாடுகளும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

ஈரான் அமீரகத்தில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலைமைக்கு மத்தியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரான் இதுவரை 253 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 1,440 ட்ரோன்களையும் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT