அபுதாபியின் அஜ்பான் பகுதியில் இன்று (ஏப்ரல் 3) வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட பின்னர் விழுந்த ஏவுகணை சிதறல்களால் ஏற்பட்ட சம்பவத்திற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜ்பான் பகுதியில் ஏவுகணை சிதறல்கள் விழுந்ததில், நேபாள நாட்டைச் சேர்ந்த 6 நபர்களுக்கும், இந்திய நாட்டைச் சேர்ந்த 5 நபர்களுக்கும் லேசானது முதல் மிதமானது வரையிலான காயங்களும், நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குக் கடுமையான காயமும் ஏற்பட்டுள்ளதாக அபுதாபி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வமான மூலங்களிலிருந்து மட்டுமே பெறுமாறும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இதே போல் இன்று அபுதாபியின் ஹப்ஷான் எரிவாயு நிலையத்தில் ஏவுகணை இடைமறிப்பு சம்பவத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.