ADVERTISEMENT

ஏவுகணை இடைமறிப்பால் கொர்ஃபக்கான் துறைமுகத்தில் தீவிபத்து.. 4 பேர் காயம்..

Published: 6 Apr 2026, 8:04 AM |
Updated: 6 Apr 2026, 8:04 AM |
Posted By: admin

அமீரகத்தில் நேற்று (ஏப்ரல் 5, ஞாயிற்றுக்கிழமை), ட்ரோன் இடைமறிப்பு சம்பவத்தின் காரணமாக கோர் ஃபக்கான் துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக ஷார்ஜாவின் ஊடக ஆணையம் அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்தனர் என கூறப்பட்டுள்ளது. அதில் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்து மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும், மேலும் 3 பாகிஸ்தாணியர்களுக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்துவிட்டதாகவும், தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ மூலங்களிலிருந்து மட்டுமே தகவல்களைப் பெற வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதே ஒன்று ஒரு வாரத்திற்கு முன்பு, ஷார்ஜாவின் துரையா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிர்வாகக் கட்டிடத்தை ட்ரோன் தாக்குதல் ஒன்று குறிவைத்தது. அந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள், இது போன்ற சம்பவங்களின் போது சைரன்கள் மூலம் குடியிருப்பாளர்களை எச்சரித்து வருகின்றனர். மேலும், அமீரகம் முழுவதும் கேட்கப்படும் சப்தங்கள், வெற்றிகரமான வான் பாதுகாப்பு இடைமறிப்புகளின் விளைவாகவே ஏற்பட்டன என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட குழுக்கள் நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. துல்லியமான தகவல்களுக்கு, பொதுமக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.