ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஒரு மாதத்திற்கும் மேலாக ஈரானின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், அபுதாபியின் ருவைஸ் தொழில்துறை பகுதியில் இன்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை வான் பாதுகாப்பு வெற்றிகரமாக இடைமறித்த போதிலும், வெடித்து சிதறிய துண்டுகள் கீழே விழுந்ததில் புரூஜ் பெட்ரோகெமிக்கல்ஸ் (Borouge) ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதம் மதிப்பிடப்படும் வரை, ஆலையின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதில் எந்த காயங்களும் பதிவாகவில்லை என்றும், நிலைமைக்கு ஏற்ப புதுப்பிப்புகள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசு ஆதாரங்களை மட்டுமே நம்புமாறும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத அறிக்கைகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6:44 மணிக்கு, ஈரானிலிருந்து வந்த ஏவுகணை அச்சுறுத்தலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பதிலளித்ததாக தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) அதிகாலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனவே, தாக்குதல் தொடர்பான முன்னறிவிப்புகள் வரும்போது குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், நிகழ்நேர எச்சரிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ வழிகளைப் பின்பற்றுமாறும் NCEMA வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil WhatsApp Channel