ADVERTISEMENT

அமீரகத்தில் ஏவுகணையின் சிதறிய பாகம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..

Published: 1 Apr 2026, 10:59 AM |
Updated: 1 Apr 2026, 11:02 AM |
Posted By: admin

அமீரகத்தில் இன்று (ஏப்ரல் 1, 2026, புதன்கிழமை) ஏவுகணையின் சிதறிய பாகங்கள் விழுந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படைகள் ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக இடைமறித்ததன் விளைவாக, ஃபுஜைராவில் உள்ள ஒரு பண்ணையில் அதன் பாகங்கள் விழுந்தன. இந்தச் சம்பவத்தில் பங்களாதேஷை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT

அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர் தொடங்கியதிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதன்மூலம் 12 ஆக உயர்ந்துள்ளது. இதில் இடைமறிப்புகளுக்குப் பிறகு விழுந்த சிதறல்களால் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில், தங்கள் கடமையைச் செய்யும்போது உயிரிழந்த ஆயுதப் படைகளின் இரண்டு உறுப்பினர்களும், ஆயுதப் படைகளால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு மொராக்கோ குடிமகனும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

உயிரிழந்த மற்ற ஒன்பது பேர்களில் பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், பாலஸ்தீனம் மற்றும் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர். அத்துடன் செவ்வாய் நிலவரப்படி, போர் தொடங்கியதிலிருந்து காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 188 என்றும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.