ADVERTISEMENT

UAE: ஏவுகணை பாகம் விழுந்ததில் இன்று இந்தியர் உட்பட 3 பேருக்கு காயம்..

Published: 8 Apr 2026, 1:01 PM |
Updated: 8 Apr 2026, 1:05 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக தாக்குதலை இடைமறித்ததைத் தொடர்ந்து, இன்று அதிகாலை ஹப்ஷான் எரிவாயு வளாகத்தில் ஏவுகணை பாகம் விழுந்ததில் மூன்று பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அபுதாபி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

அபுதாபி ஊடக அலுவலகத்தின்படி, இரண்டு அமீரக நாட்டினருக்கும் ஒரு இந்தியருக்கும் லேசான காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. கீழே விழுந்த சிதறல்கள் அந்த வளாகத்தில் பல இடங்களில் தீப்பொறிகளை ஏற்படுத்தியதால், பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் நிலைமையை மதிப்பிடும் வரை செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவிக்கையில் “வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்ததைத் தொடர்ந்து, ஏவுகணை பாகம் விழுந்ததாலேயே இது நிகழ்ந்தது என்பதை அபுதாபி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்,” என்று அந்த அறிக்கை கூறியது.

ADVERTISEMENT

ஈரானிடமிருந்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகம் வான் பாதுகாப்புகளைச் செயல்படுத்திய நிலையில், இன்று (புதன்கிழமை) அதிகாலை நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அபுதாபியின் ஹப்ஷான் எரிவாயு வளாகத்தின் மீதான மூன்றாவது தாக்குதலாகும். இதற்கு முன் கடந்த ஏப்ரல் 3 (வெள்ளிக்கிழமை) அன்று, இடைமறிக்கப்பட்ட தாக்குதலின் சிதறல்கள் அந்த இடத்தில் விழுந்ததில், ஒரு எகிப்தியர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை இடைமறிக்கப்பட்ட தாக்குதலின் சிதறல்களால் ஹப்ஷான் வளாகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உள்நாட்டுத் தேவை அதன் மற்ற நிலையங்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக adnoc கேஸ் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தது.

இதற்கும் முன்னதாக கடந்த மார்ச் 19 அன்று நடந்த முந்தைய தாக்குதலுக்குப் பிறகு எரிவாயு நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன. அதே நாளில், பாப் எண்ணெய் வயலும் சமீபத்திய தாக்குதல்களின் இலக்காக இருந்தது, இருப்பினும் அப்போது எந்த காயங்களும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார காலத்திற்கு போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டு ஹோர்முஸ் நீரிணை திறப்பதாக ஈரான் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.