துபாயின் மெரினா பகுதியில் இன்று (மே 6, 2026, புதன்கிழமை) கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் பல சைரன் ஒலிகளைக் கேட்டதாக அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அப்பகுதியில் வானத்தில் அடர்த்தியான புகை சூழ்ந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்தச் சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.