ADVERTISEMENT

வெறும் 10 திர்ஹம்ஸில் அபுதாபி ஸ்டேடியத்தில் T10 கிரிக்கெட் போட்டிகளைக் காணலாம்.. நவம்பர் 1 வரை சிறப்புச் சலுகை!!

Published: 29 Oct 2026, 5:53 PM |
Updated: 29 Oct 2026, 5:53 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், சையத் கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 7 முதல் 20 வரை நடைபெறும் அபுதாபி T10 போட்டிகளை வெறும் 10 திர்ஹம்ஸ்க்கு கண்டு ரசிக்கலாம். இதற்கான முன்கூட்டிய டிக்கெட்டுகள் இப்போது விற்பனைக்கு வந்துள்ளன.

ADVERTISEMENT

போட்டிகளின் அதிகாரப்பூர்வ டிக்கெட் விற்பனை கூட்டாளரான ‘டிஸ்ட்ரிக்ட்’, நவம்பர் 1 வரை பொது நுழைவு டிக்கெட்டுகளை சலுகை விலையில் வழங்குகிறது. நவம்பர் 2 முதல், டிக்கெட் விலை 20 திர்ஹம்ஸ் ஆக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரசிகர்கள் தள்ளுபடி விலையில் தங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்ய ஒரு குறுகிய கால அவகாசம் கிடைக்கிறது.

மேலும், இந்தச் சலுகை, நவம்பர் 20 அன்று நடைபெறும் இறுதிப் போட்டி உட்பட அனைத்துப் போட்டிகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரசிகர்களுக்கான உபசரிப்பு வசதிகள்

போட்டி நடைபெறும் நாளில் ஒரு பிரீமியம் அனுபவத்தை விரும்பும் ரசிகர்கள், உபசரிப்பு அறைகளையும் (hospitality suites) முன்பதிவு செய்யலாம். இவை குடும்பங்கள், பெருநிறுவன விருந்தினர்கள் மற்றும் குழுக்களுக்கு மேம்படுத்தப்பட்ட இருக்கைகள் மற்றும் பிரத்யேக சேவைகளை வழங்குகின்றன.

இந்தப் போட்டியானது, கிரிக்கெட்டின் மிகக் குறுகிய தொழில்முறை வடிவத்தில் இரண்டு வார கால ஆட்டங்களுக்காக சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களை அபுதாபிக்குக் கொண்டுவருகிறது.

ADVERTISEMENT

இது குறித்து அபுதாபி கிரிக்கெட் மற்றும் விளையாட்டு மையம் மற்றும் அபுதாபி டி10-இன் தலைமைச் செயல் அதிகாரி மாட் பௌச்சர் பேசுகையில், இந்த முன்கூட்டிய முன்பதிவுச் சலுகையானது, போட்டியை பரந்த பார்வையாளர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் கிரிக்கெட்டைத் தாண்டி, அனைத்து வயதினரையும் மகிழ்விக்கும் வகையில் விருந்தோம்பல் தொகுப்புகள் மற்றும் ஒரு ‘Fan Village’ ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தகவலின் படி, fan villlage குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு செயல்பாடுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அவற்றுள்:

  • விளையாட்டுகள்
  • முகத்தில் வண்ணம் தீட்டுதல்
  • புகைப்பட அரங்குகள்
  • உணவு வண்டிகள்
  • பரிசுகளை வெல்லும் வாய்ப்புகள்

இந்த ஈர்ப்புகள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, ‘ஃபேன் வில்லேஜ்’ மற்றும் அதன் செயல்பாடுகளில் ஆர்வமுள்ளவர்கள் community@abudhabit10.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் பதிவு செய்யலாம்.

சமீபத்திய அறிவிப்பின் படி, நவம்பர் 1 வரை பொது நுழைவுச் சீட்டுகள் 10 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குவதால், விலை உயர்வதற்கு முன்பு ரசிகர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel