ADVERTISEMENT

கண்கவர் லேசர் காட்சிகளால் ஜொலிக்கவுள்ள எதிஹாட் ரயில் நிலையங்கள்: எங்கு, எப்போது பார்க்கலாம்?

Published: 2 Oct 2026, 12:48 PM |
Updated: 2 Oct 2026, 12:48 PM |
Posted By: Menaka

அபுதாபி, துபாய் மற்றும் ஃபுஜைரா ஆகிய இடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் நடைபெறும் கண்கவர் லேசர் ஒளி நிகழ்ச்சிகள் மூலம், எதிஹாட் ரயில் தனது பயணிகள் சேவை வலையமைப்பின் விரிவாக்கத்தைக் கொண்டாடவுள்ளது.

ADVERTISEMENT

தேசிய ரயில்வேயின் இந்தச் சிறப்பு நிகழ்ச்சிகள், பயணிகள் சேவையின் விரிவாக்கத்தைக் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளன. இப்போது அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் உள்ள அல் தைத் (Al Dhaid) மற்றும் ஃபுஜைரா ஆகிய இடங்கள் ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இது பயணிகள் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரயிலில் பயணம் செய்வதற்கான கூடுதல் வாய்ப்புகளை வழங்குகிறது.

இந்த லேசர் ஒளி நிகழ்ச்சிகள் அக்டோபர் 2 அன்று மாலை 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என்று எதிஹாட் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தற்போது செயல்பாட்டில் உள்ள எதிஹாட் ரயில் நிலையங்கள் எவை?

தற்போது நான்கு பயணிகள் ரயில் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன:

முகமது பின் சையத் சிட்டி நிலையம் – அபுதாபி
தலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சேவை அளிக்கும் அபுதாபியின் முக்கிய பயணிகள் ரயில் நிலையம் இதுவாகும்.

ADVERTISEMENT

அல் யலாயிஸ் (Al Yalayis) நிலையம் – துபாய்
ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் (Jumeirah Golf Estates) பகுதியில் அமைந்துள்ள இந்நிலையம், ஒரு நடைபாதை பாலம் வழியாக துபாய் மெட்ரோவின் ‘ரெட் லைன்’ (Red Line) பாதையில் உள்ள ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஃபுஜைரா நிலையம்
மதீனத் அல் ஹிலால் (Madinat Al Hilal) பகுதியில் அமைந்துள்ள இந்நிலையம், ஃபுஜைராவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பயணிகளுக்குச் சேவை அளிக்கிறது.

அல் தைத் (Al Dhaid) நிலையம் – ஷார்ஜா
அல் தைத் பகுதிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பயணிகளுக்கு, அபுதாபி மற்றும் ஃபுஜைராவுக்கான சேவைகள் உட்பட ரயில் இணைப்புகளை இந்நிலையம் வழங்குகிறது.

எதிஹாட் ரயில் பயணிகள் சேவை வலையமைப்பு விரிவாக்கம்

எதிஹாட் ரயில் நிறுவனம் தனது முதல் பயணிகள் சேவையை ஜூன் 30 அன்று தொடங்கியது. இது அபுதாபி மற்றும் ஃபுஜைராவை இணைத்தது.

அதையடுத்து, கடந்த செப்டம்பர் 30 அன்று துபாய் மற்றும் அபுதாபி இடையே பயணிகள் சேவைகள் தொடங்கியபோது இந்த வலையமைப்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டது. அதே நாளில் அல் தைத் நிலையமும் திறக்கப்பட்டு, ஷார்ஜா நகரத்தை அபுதாபி மற்றும் ஃபுஜைராவுடன் இணைத்தது.

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கூடுதல் நிலையங்களைத் திறப்பதன் மூலம், பயணிகள் சேவை வலையமைப்பு படிப்படியாக மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

நவம்பர் 30, 2026

  • மதீனத் சையத்– அல் தஃப்ரா
  • லிவா – அல் தஃப்ரா

டிசம்பர் 30, 2026

  • அல் மிர்ஃபா – அல் தஃப்ரா
  • அல் தன்னா – அல் தஃப்ரா
  • அல் சிலா – அல் தஃப்ரா

மார்ச் 30, 2027

  • யுனிவர்சிட்டி சிட்டி – ஷார்ஜா

மேற்கூறிய அறிவிக்கப்பட்ட அனைத்து கட்டங்களும் நிறைவடைந்த பிறகு, எத்திஹாத் ரயில் (Etihad Rail) பயணிகள் சேவை வலையமைப்பானது அமீரகம் முழுவதும் 10 நிலையங்களைக் கொண்டிருக்கும்.

லேசர் காட்சிகளை எப்போது, ​​எங்கே காணலாம்?

தொடக்க விழா கொண்டாட்டங்கள் அபுதாபி, துபாய் மற்றும் ஃபுஜைரா ஆகிய இடங்களில் உள்ள எத்திஹாத் ரயில் நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எத்திஹாத் ரயில் தனது பயணிகள் சேவையின் புதிய விரிவாக்கத்தைக் கொண்டாடும் வேளையில், பார்வையாளர்கள் இந்தக் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காணும் வகையில் அக்டோபர் 2 அன்று மாலை 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை லேசர் காட்சிகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel