ADVERTISEMENT

அமீரகத்தில் ரமலான் 2027 எப்போது? தேதிகள் மற்றும் பொது விடுமுறை நாட்களின் விபரங்கள் இங்கே…

Published: 17 Oct 2026, 5:09 PM |
Updated: 17 Oct 2026, 5:09 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் 2027 ஆம் ஆண்டிற்கான ரமலான் மற்றும் ஈத் விடுமுறைகளைத் திட்டமிடத் தொடங்கலாம். ஏனெனில், ரமலான் மாதம் எப்போது தொடங்கும் மற்றும் எவ்வளவு காலம் இடைவேளை நீடிக்கும் என்பது குறித்த ஆரம்பத் தகவல்கள் கிடைத்துள்ளன. வானியல் முன்னறிவிப்புகளின் படி, ரமலான் பிப்ரவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ஈத் அல் பித்ர் மார்ச் மாதத்தில் தொடர் விடுமுறையைக் கொண்டுவரும்.

ADVERTISEMENT

இருப்பினும், தேதிகள் தற்காலிகமாகவே உள்ளன மற்றும் அதிகாரப்பூர்வ பிறை நிலவைக் கண்ட பிறகு உறுதிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரமலான் 2027 அமீரகத்தில் எப்போது தொடங்கும்?

வானியல் கணிப்புகளின்படி, அமீரகத்தில் ரம்ஜான் பிப்ரவரி 8, 2027 திங்கட்கிழமை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இது குறித்து எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் இப்ராஹிம் அல் ஜார்வான் பேசுகையில், புனித மாதம் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

ஈத் அல் ஃபித்ர் 2027 எப்போது?

ஷவ்வால் பிறை நிலவு பார்ப்பதை பொறுத்து, ஈத் அல் பித்ர் செவ்வாய், மார்ச் 9 அல்லது மார்ச் 10 புதன்கிழமை அன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
  • மார்ச் 9: மார்ச் 8 ஆம் தேதி மாலையில் பிறை தென்பட்டால், 29 நாட்களுக்குப் பிறகு ரமலான் முடிவடையும்.
  • மார்ச் 10: பிறை தென்படவில்லை என்றால், ரமலான் 30 நாட்களை நிறைவு செய்யும், அடுத்த நாள் ஈத் தொடங்கும்.

எவ்வாறாயினும், சரியான தேதி சம்பந்தப்பட்ட UAE அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படும்.

ஈத் அல் அதா 2027 எப்போது?

அதைத் தொடர்ந்து, அரஃபா தினம் மற்றும் ஈத் அல் அதா ஆகியவை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டு மே 15 முதல் மே 18, 2027 வரை நான்கு நாள் பொது விடுமுறையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், அரஃபா தினம் மே 15 சனிக்கிழமையும், அதைத் தொடர்ந்து மே 16, ஞாயிற்றுக்கிழமை முதல் மே 18 செவ்வாய் வரை ஈத் அல் அதாவும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியான தேதிகள் துல் ஹஜ் பிறை நிலவின் பார்வையைப் பொறுத்தது.

குடியிருப்பாளர்கள் ஆறு நாள் ஈத் அல் பித்ர் விடுமுறையைப் பெற முடியுமா?

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது விடுமுறை விதிகள் மூலம் சில குடியிருப்பாளர்கள் 2027 இல் ஈத் அல் ஃபித்ருக்கு ஆறு நாள் விடுமுறையை பெறலாம்.

அதேபோல், ஷவ்வாலின் முதல் மூன்று நாட்களுக்கு பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறைக்கு உரிமையுடையவர்கள். ரமலான் 30 நாட்கள் நீடித்தால், ரமலானின் இறுதி நாள் பொது விடுமுறை நாளாகும், இதனால் விடுமுறையை நான்கு நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்.

அதன்படி ஒருவேளை மார்ச் 9 அன்று ஈத் அல் பித்ராக அல்லாமல், ரமலானின் 30வது நாள் செவ்வாய், மார்ச் 9, ஆக இருந்தால் ஈத் அல் பித்ர் மார்ச் 10 புதன்கிழமை முதல் மார்ச் 12 வெள்ளி வரை இருக்கும்.

எனவே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான வார இறுதியில் வரும் குடியிருப்பாளர்களுக்கு, தேதிகளின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டு, மார்ச் 9 முதல் மார்ச் 14 வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel