உம் அல் குவைன் அருகே எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷார்ஜா நகராட்சி நிர்வாகம் அல் ஹம்ரியா கடற்கரையை தற்காலிகமாக மூடியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரைப் பகுதியைப் பாதுகாக்கும் நோக்கில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்கரையின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கடல் மாசுபடுவதைத் தடுக்கவும் சிறப்பு குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
எனவே, மீனவர்கள் மற்றும் கடலுக்குச் செல்வோர், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, எண்ணெய் கசிவால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கண்டறியவும், அதைக் கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் தற்போது பணியாற்றி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel