ADVERTISEMENT

அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் 25 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை வென்ற இந்தியர்!!

Published: 4 Nov 2026, 12:33 PM |
Updated: 4 Nov 2026, 12:35 PM |
Posted By: Menaka

ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வரும் பிக் டிக்கெட் ராஃபிள் டிராவின் நவம்பர் மாதத்திற்கான குலுக்கலில் துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர் பரிசுத்தொகையை தட்டி சென்றுள்ளார். இதன் மூலம் அவர் நவம்பர் 3, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற பிக் டிக்கெட் அபுதாபியின் சமீபத்திய நேரடி டிராவில் 25 மில்லியன் திர்ஹாம் வென்று, தனது வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்டத்தைப் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

மீனா சரீன் (Mina Sareen) என்பவர், 304251 என்ற வெற்றி டிக்கெட்டை கடந்த அக்டோபர் 18 அன்று வாங்கினார். அவர் வாங்கிய அந்த டிக்கெட் தற்பொழுது அவருக்கு மிகப்பெரிய பரிசுத்தொகை கிடைக்க வழிவகுத்துள்ளது.

இதனை தொடர்ந்து அடுத்த பிக் டிக்கெட் நேரடி குலுக்கல் டிசம்பர் 3 அன்று நடைபெறும், அப்போது வரவிருக்கும் 25 மில்லியன் திர்ஹாம் கிராண்ட் பரிசின் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிக் டிக்கெட் மோசடி எச்சரிக்கை

நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான ரிச்சர்ட் மற்றும் பௌச்ரா, டிராவில் பங்கேற்பவர்களைக் குறிவைக்கும் மோசடிகள் குறித்த எச்சரிக்கையுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினர்.

பிக் டிக்கெட் பிரதிநிதிகள் போல் நடித்து, தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் மோசடிக்காரர்களுக்கு எதிராக அவர்கள் மக்களை எச்சரித்தனர்.

ADVERTISEMENT

எனவே, டிராவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக, வெற்றி அறிவிப்பைச் சரிபார்க்குமாறு பங்கேற்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். மேலும், அறிமுகமில்லாத நபர்களுடன் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இந்தியருக்கு சொகுசு கார் பரிசு

இந்த டிராவின் போது ஒரு சொகுசு ரேஞ்ச் ரோவர் வேலார் காரும் பரிசாக வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற டிக்கெட் எண்ணான 025383, அல் அய்னில் வசிக்கும் இந்தியரான காஜா துல்யாத் என்பவரால் அக்டோபர் 27 அன்று வாங்கப்பட்டது.

இதையடுத்து, டிசம்பர் 3 அன்று நடைபெறும் அடுத்த நேரடி குலுக்கலில், கருப்பு நிற நிசான் பேட்ரோல் காரும் பரிசுகளில் ஒன்றாக வழங்கப்படும் என்று பிக் டிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐந்து வெற்றியாளர்களுக்கு 200 கிராம் தங்கக் கட்டிகள்

கூடுதலாக, ஐந்து பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் ஆறுதல் பரிசாக 200 கிராம், 24 காரட் தங்கக் கட்டியை வென்றனர்.

வெற்றியாளர்கள் விவரம்:

  • முகமது சைஃபுல் இஸ்லாம் – ஷார்ஜாவில் வசிக்கும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர், டிக்கெட் எண் 302129.
  • முகமது முஸ்லிம் – அபுதாபியில் வசிக்கும் இந்தியர், டிக்கெட் எண் 197099.
  • அன்ஷாத் வி.எம். – அல் ஐனில் வசிக்கும் இந்தியர், டிக்கெட் எண் 048930.
  • அஹ்மத் அல் கெத்பி – அல் தைதில் வசிக்கும் ஐக்கிய அரபு அமீரகக் குடிமகன், டிக்கெட் எண் 236854.
  • ஷஃபி பாபோஹாஜி – அல் ஐனில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த இந்தியர், டிக்கெட் எண் 346934.

‘பிக் ஸ்பின்’ (Big Spin) வெற்றியாளர்களுக்கு தலா 100,000 திர்ஹம் வரை பரிசு

கடந்த மாதம் நடைபெற்ற நேரலை டிராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று போட்டியாளர்கள் ‘பிக் ஸ்பின்’ விளையாட்டில் பங்கேற்றனர்.

  • பாகிஸ்தானைச் சேர்ந்த இனாம் உல் ஹுசைன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அவருக்குப் பதிலாக நிகழ்ச்சி தொகுப்பாளர் ரிச்சர்ட் சக்கரத்தைச் சுழற்ற, அவர் 50,000 திர்ஹம்களை வென்றார்.
  • துபாயில் வசிக்கும் இந்தியரான பிரீதம் குமார், நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 100,000 திர்ஹம்களை வென்றார். அவர் இந்தப் பரிசை, அவருடன் இணைந்து டிக்கெட் வாங்கிய தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
  • அமீரகத்தில் வசிக்கும் எகிப்தியரான காசர் அல் அகமி என்பவரும் 100,000 திர்ஹம்களை வென்றார்.

வருகின்ற டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘பிக் ஸ்பின்’ நிகழ்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று போட்டியாளர்கள்:

  • அப்துல் சலாம் – அபுதாபியின் முசாஃபாவில் வசிக்கும் இந்தியர், டிக்கெட் எண் 286526.
  • கெரன் ஓ’ஃப்ளாஹெர்ட்டி – அபுதாபியில் வசிக்கும் ஐக்கிய இராச்சியத்தைச் (UK) சேர்ந்தவர், டிக்கெட் எண் 003722.
  • முகமது ஆலம் – அபுதாபியில் வசிக்கும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர், டிக்கெட் எண் 106885.

‘டியர் பிக் டிக்கெட்’ (Dear Big Ticket) வெற்றியாளர்களுக்கு 100,000 திர்ஹம் பரிசு

இதற்கிடையில், தங்கள் தனிப்பட்ட கதைகளையும் கனவுகளையும் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்த ‘டியர் பிக் டிக்கெட்’ ப்ரோமோஷன் மூலம், பல பங்கேற்பாளர்கள் தலா 100,000 திர்ஹம் பரிசுகளை வென்றுள்ளனர். பார்வையாளர்களின் மனதைத் தொட்ட ஒரு கதை, வெளிநாட்டில் வசிக்கும் இனேஷ் மோகன் மற்றும் அவரது மனைவி மோனிக் ஆகியோருடையது. இவர்களது மகன் ஜாக், கடுமையான மூளைக் குறைபாட்டுடன் பிறந்தான். அவனுக்கு மூளைத் தண்டு (brain stem) இல்லை. மேலும் அவன் காது கேளாதவனாகவும், பார்வையற்றவனாகவும் இருக்கிறான். அவனது குரலைத் தாங்கள் ஒருபோதும் கேட்டதில்லை என்று அந்தத் தம்பதியினர் தெரிவித்தனர்.

தங்கள் மகனுக்காக ஒரு வீட்டை உறுதி செய்ய வேண்டும் என்பதே அந்தத் தம்பதியினரின் மிகப்பெரிய கனவாக இருந்தது. ஆனால், நிதி நெருக்கடியால் அவர்களால் தவணைத் தொகைகளைச் செலுத்த முடியாமல் போனது. இதனால் வீட்டை விற்பனை செய்த நிறுவனத்திடமிருந்து சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோனிக், இந்த எதிர்பாராத வெற்றி தங்கள் வீட்டைப் பாதுகாக்க உதவும் என்று கூறியிருந்தார்.

மேலும், “இந்த ‘பிக் டிக்கெட்’ (Big Ticket) வெற்றி முற்றிலும் எதிர்பாராதது. என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. கடந்த ஏழரை ஆண்டுகளாக உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் வாழ்ந்து வரும் எங்கள் மகனுக்காக, இந்த வீட்டைத் தக்கவைத்துக்கொள்ள இது உதவும்,” என்று அவர் உணர்ச்சிகரமாகக் கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel