ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது அமலில் இருந்து வரும் குற்றவியலுக்கான தண்டனை தொடர்பான சட்டங்களை மேம்படுத்தும் விதமாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஃபெடரல் க்ரைம் மற்றும் தண்டனைச் சட்டத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு அங்கீகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டமியற்றும் முறையை மேலும் மேம்படுத்துவதையும், செம்மைப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட சட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் அரசாங்க ஊடக அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
அமீரகத்தின் இந்த புதிய சட்டமானது பெண்கள் மற்றும் வீட்டு வேலையாட்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்குதல், பொது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துதல் மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவுகளுக்கான கட்டுப்பாடுகளை எளிதாக்குதல் போன்ற சட்டங்களுடன் வரும் ஜனவரி 2, 2022 முதல் முழுமையாக இயற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம், முதலீடு மற்றும் வணிக வாய்ப்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இயற்றப்படவுள்ள, நாட்டின் சட்ட அமைப்பின் பரந்த அளவிலான இந்த சீர்திருத்தத்திற்கு அமீரகத்தின் தலைவரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய சட்டம் பொது ஒழுங்கின்மை குற்றங்களுக்கான புதிய குற்றவியல் தண்டனைகள் மற்றும் பல நடத்தைகளை குற்றவியல் தண்டனையிலிருந்து நீக்குதல் போன்ற தற்போதைய சட்டத்தின் பல பகுதிகளில் திருத்தங்களை உள்ளடக்கியுள்ளது.
>> பொது இடத்திலோ அல்லது உரிமம் இல்லாத இடங்களிலோ மது அருந்துவதையும், 21 வயதிற்குட்பட்ட எவருக்கும் மதுபானங்களை விற்பது, வழங்குவது அல்லது மதுபானங்களை உட்கொள்ள தூண்டுவது ஆகியவற்றையும் புதிய சட்டம் தடை செய்கிறது.
>> புதிய சட்டம் கற்பழிப்பு அல்லது சம்மதமற்ற உடலுறவு குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு உட்பட்டவராகவோ, மாற்றுத்திறனாளியாகவோ அல்லது எதிர்ப்பை வழங்க முடியாத நிலையில் இருப்பவராகவோ இருந்தால் குற்றவாளிக்கு மரண தண்டனைக்கு நீட்டிக்கப்படலாம்.
>> புதிய சட்டம் அநாகரீகமான தாக்குதல் குற்றத்தில் ஈடுபடும் நபருக்கு, பாதிக்கப்பட்டவரின் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் சிறைத்தண்டனை அல்லது 10,000 திர்ஹம்ஸிற்கு குறையாத அபராதத்துடன் தண்டனையை வழங்குகிறது. குற்றத்தின் போது அச்சுறுத்தல் செய்திருந்தால் அபராதம் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத மற்றும் 20 இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
>> அநாகரீகமான தாக்குதல் குற்றத்தில் பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்குக் குறைவானவராகவோ, ஊனமுற்றவராகவோ அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளவராகவோ இருப்பின், தண்டனையானது பத்து ஆண்டுகளுக்குக் குறையாத மற்றும் 25 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத் தண்டனையாக உயரும். மேலும், வேலை, படிப்பு, தங்குமிடம் போன்ற இடங்களில் குற்றம் நடந்தால் மிகவும் கடுமையான தண்டனை பொருந்தும்.
>> புதிய சட்டம் 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவருடன் சம்மதத்துடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபடும் குற்றத்திற்கு ஆறு மாதத்திற்கு குறையாமல் சிறை தண்டனை வழங்குகிறது. இந்த குற்றம் கிரிமினல் வழக்காக அல்லாமல் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்ட பெண்ணின் கணவர் அல்லது அப்பெண்ணின் பாதுகாவலரின் புகாரின் அடிப்படையில் மட்டுமே நிறுவப்பட்டது என்பதைக் குறிப்பிடுவதுடன் புதிய சட்டத்தில் தண்டிக்கப்படுகிறது. மேலும் எல்லா சந்தர்ப்பங்களிலும், கணவன் அல்லது அப்பெண்ணின் பாதுகாவலருக்கு புகாரைத் தள்ளுபடி செய்ய உரிமை உண்டு, மேலும் தள்ளுபடியானது கிரிமினல் வழக்கின் காலாவதியை அல்லது தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கிறது.
>> புதிய சட்டத்தின் படி, திருமணத்திற்குப் புறம்பாக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் எந்தவொரு ஜோடியும், அந்த நாட்டின் பொருந்தக்கூடிய சட்டங்களைக் கருத்தில் கொண்டு, அந்த நாட்டின் சட்டங்களின்படி, இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது தனியாக அல்லது இருவருமாக சேர்ந்து அக்குழந்தையை தங்கள் குழந்தையாக அங்கீகரிக்க வேண்டும் மற்றும் தங்களின் அடையாள ஆவணங்கள் மற்றும் பயண ஆவணங்களை வழங்க வேண்டும். இதை தவறும் பட்சத்தில் ஒரு குற்றவியல் வழக்கு பதியப்பட்டு இரண்டு நபர்களுக்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிமுகப்படுத்தப்படும்.
>> குற்றம் மற்றும் தண்டனைச் சட்டத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மிக முக்கியமான விதிகளில் ஒன்று, ஐக்கிய அரபு அமீரக நாட்டை சேர்ந்த ஒரு குடிமகனுக்கு எதிராக திட்டமிடப்பட்ட கொலையைச் செய்பவர்களுக்கும் அல்லது அதில் பங்கேற்கும் எவருக்கும் மேலும் நாட்டிற்கு வெளியே குற்றம் நடந்தாலும், குற்ற செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும்.