ADVERTISEMENT

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்..!!! 27 பேராக உயர்வு..!!!

Published: 26 Mar 2020, 3:40 PM |
Updated: 26 Mar 2020, 3:41 PM |
Posted By: admin

உலகெங்கிலும் வேகமாகப் பரவி வரும் கொரோனா, தற்பொழுது தமிழ்நாட்டிலும் தனது பாதிப்பை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முன்னதாக, தமிழகத்தில் 18 பேருக்கு இருந்த கொரோனா பாதிப்பு, நேற்று ஒரே நாளில் புதிதாக 8 பேருக்கு உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது துபாயில் இருந்து திருச்சி வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்பொழுது இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், மிக அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் எனவும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக, தமிழகத்தில் கொரோனா பாதித்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவே தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT