ADVERTISEMENT

புதிய வரியை அறிமுகப்படுத்தியுள்ள ஐக்கிய அரபு அமீரகம்…!! அடுத்த ஆண்டு முதல் அமல்…!!

Published: 31 Jan 2022, 3:59 PM |
Updated: 31 Jan 2022, 4:14 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி அமைச்சகம் ஜூன் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் நிதியாண்டுகளில் வணிக லாபத்தின் மீது கார்ப்பரேட் வரியை அறிமுகப்படுத்தும் என தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த அறிவிப்பின்படி சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு 375,000 திர்ஹம் வரையிலான லாபத்திற்கு வரி இருக்காது என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதே போல் வணிகம், உரிமம் பெற்ற வணிக நடவடிக்கைகள் அல்லது அனுமதி பெற்று இயங்கும் பிற வணிக நடவடிக்கைகள் தவிர்த்து வேலைவாய்ப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் பிற முதலீடுகளில் இருந்து கிடைக்கும் தனிநபர்கள் சம்பாதித்த வருமானம் மீது கார்ப்பரேட் வரி விதிக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இப்போது வரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் கார்ப்பரேட் வரிகள் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அவர்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருக்கின்றது. தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள கார்ப்பரேட் வரியானது நிறுவனங்களுக்கு 9% வரியை நிர்ணயித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த அறிவிப்பு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச வரியை நிர்ணயிக்க விரும்பும் உலகின் முன்னணி பொருளாதாரங்களுக்கு இயல்பான முன்னேற்றமாக பார்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT