ADVERTISEMENT

அமீரகத்தில் பள்ளி பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து..!! உடனடியாக கட்டுப்படுத்திய பாதுகாப்பு குழுவினர்..!!

Published: 23 Feb 2022, 8:17 PM |
Updated: 23 Feb 2022, 8:20 PM |
Posted By: admin

அமீரகத்தில் மாணவர்களை ஏற்றிச்செல்லும் பள்ளி பேருந்து ஒன்றில் திடீரென இன்று தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜாவின் அல் தாவுன் பகுதியில் உள்ள பள்ளி பேருந்தில் ஏற்பட்ட தீயை ஷார்ஜா குடிமைத் தற்காப்புக் குழு உடனடியாக அங்கு சென்று கட்டுப்படுத்தியுள்ளது. மேலும் இந்த தீவிபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

ஷார்ஜா சிவில் டிஃபென்ஸின் உயர் அதிகாரி இது பற்றி கூறியதாவது, இந்த சம்பவம் குறித்து ஷார்ஜாவில் உள்ள சிவில் பாதுகாப்புத் துறையின் செயல்பாட்டு அறையில் பிற்பகல் 2:52 மணியளவில் தகவல் வந்ததாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

அதனைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ஒரு குழு உடனடியாக அனுப்பப்பட்டு 14 நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீவிபத்து ஏற்பட்ட உடனே மாணவர்கள் பேருந்தில் இருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் யாருக்கும் காயங்கள் அல்லது மூச்சுத் திணறல் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT