ADVERTISEMENT

UAE: பிக் டிக்கெட்டில் இரண்டாவது முறையாக பரிசுத்தொகையை வென்ற இந்தியர்…!!

Published: 2 Mar 2022, 1:33 PM |
Updated: 2 Mar 2022, 1:36 PM |
Posted By: admin

அபுதாபியில் வசிக்கும் இந்தியர் பிக் டிக்கெட் நடத்திய மின்னணுவாராந்திர டிராவில் வெற்றி பெற்று 500,000 திர்ஹம்ஸ் ரொக்கப்பரிசை தட்டிச்சென்றுள்ளார். இவர் ஏற்கெனவே பிக் டிக்கெட்டில் வென்றிருக்கிறார் என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் வசிக்கும் சையத் அலி கண்ணன், என்பவர் தனியாருக்கு சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 24 ஆண்டுகளாக பிக் டிக்கெட் வாங்கி வருவதாக தெரிவித்துள்ளார். அவர் முதன்முதலில் 1998 ம் ஆண்டு பிக் டிக்கெட்டில் ரொக்கப் பரிசை வென்றிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் வெற்றி பெற்ற பிறகும் கூட இத்தனை வருடங்களாக பிக் டிக்கெட்டினை வாங்கி வந்த நிலையில் அவர் 2022 இல் மீண்டும் வென்றுள்ளார்.

ADVERTISEMENT

இவரின் நண்பர் அப்துல் மஜீத் கூறுகையில், அவர்கள் பல தசாப்தங்களாக கூட்டாக டிக்கெட் வாங்குவதாக தெரிவித்துள்ளார். இது பற்றி கூறுகையில் “கடந்த 20 வருடங்களாக சையத் அலியுடன் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் டிக்கெட்டுகளைப் பகிர்ந்து வருகிறேன். அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நான் நம்புகிறேன். நான் இதை மிக நீண்ட காலமாக செய்து வருகிறேன். அது இறுதியாக பலனளித்துள்ளது. இறுதியாக பிப்ரவரி 22 அன்று அவர் டிக்கெட்டை வாங்கினார்” என கூறியுள்ளார்.

இதற்கிடையில், இந்த மாதம் நடைபெறும் வாராந்திர குலுக்கலில் வெல்பவர்களுக்கு 300,000 திர்ஹம் பரிசுத் தொகை கிடைக்கும் என பிக் டிக்கெட் குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT