ADVERTISEMENT

UAE: ஒரே ஒரு ஃபோட்டோ போதும்.. ‘ABU DHABI THROUGH YOUR EYES’ போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறலாம்..!

Published: 13 Jun 2022, 8:54 AM |
Updated: 13 Jun 2022, 8:54 AM |
Posted By: admin

அமீரகத் தலைநகர் அபுதாபியின் சிறந்த புகைப்படங்களை குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ‘அபுதாபி த்ரூ யுவர் ஐஸ்’ என்ற புகைப்பட போட்டியின் கீழ் சமர்ப்பித்து பரிசுகளை வெல்லலாம்.

ADVERTISEMENT

ஜூன் மாத இறுதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், அபுதாபி நகர முனிசிபாலிட்டியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளுக்கு போட்டியாளர்கள் புகைப்படங்களைத் தொகுக்கலாம். இது புகைப்படக் கலைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் திறன்களின் அடிப்படையில் சிறந்த புகைப்படங்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.

இது UAE குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே..

இது குறித்து சமூக வலைதள அறிவிப்பில், அபுதாபி நகர முனிசிபாலிட்டி, அபுதாபியில் நிகழும் அழகியல் அம்சங்களையும் நகர்ப்புற மறுமலர்ச்சியையும் சிறப்பித்துக் காட்டும் வகையில், அனைத்து புகைப்பட ஆர்வலர்களையும் ஈடுபடுத்தும் வகையில் இந்தப் போட்டி அமைக்கப்பட்டுள்ளது. பங்கேற்கும் புகைப்படக் கலைஞர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வெற்றிபெறும் படங்கள் அபுதாபி கார்னிச்சிலும் காட்டப்படுவதோடு, 8 வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

இதில் பங்கேற்க, விண்ணப்பதாரர் படம்பிடித்த புகைப்படங்களை, அவர்களின் முழுப்பெயர் மற்றும் எண்ணுடன், talents@adm.gov.ae என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ADVERTISEMENT

போட்டி விதிகள்

  • போட்டியில் பயன்படுத்தப்படும் புகைப்படம் பங்கேற்பாளரால் சுயமாக எடுக்கப்பட வேண்டும்.
  • பங்கேற்பாளர் வேறு ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர கூடாது.
  • புகைப்படம் தொழில்முறை கேமரா மூலம் எடுக்கப்பட வேண்டும்.
  • புகைப்படம் 3 மெகாபைட்டுகளுக்கு குறைவாக இருக்கக் கூடாது, மேலும் jpeg அடிப்படையில் இருக்க வேண்டும்.
  • புகைப்படங்கள் RGB வண்ண மாதிரியில் இருக்க வேண்டும்.
  • நேரம், தேதி மற்றும் புகைப்படக் கலைஞரின் கையொப்பம் போன்ற புகைப்படங்கள் புறக்கணிக்கப்படும்.
  • புகைப்படம் உயர் தரத்தில் இருக்க வேண்டும், மேலும் அது 2600 dpi (2400×300) தெளிவுத் திறனுக்குக் குறைவாக இருக்கக்கூடாது.
  • புகைப்படத்தின் விவரங்களில் பொது ரசனை, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். மேலும் அதில் எந்த அரசியல், மதவெறி சின்னங்கள் போன்ற வெளிப்பாடுகள் இருக்கக்கூடாது.
  • புகைப்படத்தின் இடம் குறிப்பிடப்பட வேண்டும்.
  • போட்டி UAE-இல் வசிப்பவர்களுக்கு மட்டுமே.
  • பங்கேற்க ஒரே ஒரு சிறந்த புகைப்படம் தேவை.
  • புகைப்படம் மற்ற போட்டிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கவோ அல்லது சமர்ப்பிக்கப்பட்டிருக்கவோ கூடாது, மேலும் இதுபோன்ற செயல்கள் நிரூபிக்கப்பட்டால் அந்தப் புகைப்படத்தை நிராகரிக்கவும் பரிசைத் திரும்பப் பெறவும் போட்டியின் நிர்வாகக் குழுவுக்கு உரிமை உண்டு.
  • புகைப்படம் அபுதாபி தீவு மற்றும் நிலப்பரப்பில் உள்ள பகுதிகளாக இருக்க வேண்டும்.