ADVERTISEMENT

UAE: பொது பேருந்துகளில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்.. பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுரை..!!

Published: 13 Jun 2022, 10:38 AM |
Updated: 13 Jun 2022, 11:32 AM |
Posted By: admin

அமீரக பேருந்துகளில் பிக்பாக்கெட் திருடர்களிடமிருந்து பயணிகள் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். குற்றச்செயல்களை தடுக்க அதிகாரிகள் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சாரங்களில், திருட்டில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகள் குறித்து பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இது தொடர்பாக ராஸ் அல் கைமா காவல்துறையின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் கர்னல் அப்துல்லா அஹ்மத் பின் சல்மான் அல் நுஐமி கூறுகையில், “தற்போது திருடர்கள் அதிகமாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர், ஏனெனில் அதில் மக்கள் வரத்து அதிகமாக இருக்கின்றது” என்றார்.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் அனைத்து பயணிகளும் குறிப்புகளை மனதில் கொண்டு கவனமுடன் பயணிக்குமாறு  கர்னல் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

ADVERTISEMENT