ADVERTISEMENT

அமீரகத்தில் இருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு சென்றுக்கொண்டிருந்த இந்தியர் உயிரிழப்பு.. விமான நிலையத்தில் காத்திருந்த குடும்பத்தினர் அதிர்ச்சி..!

Published: 14 Jun 2022, 10:00 AM |
Updated: 14 Jun 2022, 10:06 AM |
Posted By: admin

அமீரகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முகமது ஃபைசலை வரவேற்க அவரது குடும்பத்தினர் கேரள மாநிலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது விமானம் நிலைய அதிகாரிகள், முகமது ஃபைசல் விமானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பாத்தினரிடம் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இது குறித்து பி.பி. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் பிராந்திய மேலாளர் சிங் கூறுகையில், “ஷார்ஜாவிலிருந்து கோழிக்கோடு செல்லும் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் சமயத்தில் ஃபைசல் மயங்கிவிட்டார். இதனையடுத்து மருத்துவ குழு அவருக்கு சிகிச்சை தேவை அளித்தது, உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் விமானம் தரையில் இறங்கியதும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்துவிட்டார்” என்றார்.

முகமது பைசலுக்கு மூளை நோய் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர், மூன்று வருடங்களாக ஃபைசல் குடும்பங்களை பிரிந்து அமீரகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது அவர் அறுவை சிகிச்சைப் பெறவே சொந்த ஊருக்கு சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT