ADVERTISEMENT

அமீரகத்தில் உங்களது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதா..? பாஸ்போர்ட் இன்றி பயணம் செய்வது எப்படி..? முழு விபரம் உள்ளே..!

Published: 14 Jun 2022, 8:10 PM |
Updated: 14 Jun 2022, 8:10 PM |
Posted By: admin

அமீரக அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு ஃபெடரல் அத்தாரிட்டியான (ICP), அமீரகத்தில் வசிப்பவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக EXIT PERMIT-ஐ பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஆன்லைனில் EXIT PERMIT அனுமதியை எவ்வாறு பெறுவது? அதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் சேவைக்கான செலவுகள் குறித்து காணலாம்.

EXIT PERMIT பெறுவது எப்படி:

உங்கள் விசா துபாய் தவிர வேறு எமிரேட்டால் இருந்தால், அதன் இணையதளம் அல்லது சேவை மையங்கள் வழியாக ICP மூலம் EXIT PERMIT-க்கு விண்ணப்பிக்க வேண்டும். அல்லது நீங்கள் துபாய் விசாவில் இருந்தால், நீங்கள் வெளியேறும் அனுமதிக்கு GDRFA சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

ICP அல்லது GDRFA வழியாக EXIT PERMIT பெறுவதற்கு விண்ணப்பமும் ஆவணங்களும் ஒரே மாதிரியானவை.

தேவையானஆவணங்கள்:

இந்திய தூதரகத்திலிருந்து பயணத்திற்கான ஆவணம்.
தொலைந்த பாஸ்போர்ட் குறித்து போலிஸிடமிருந்து அறிக்கை..
விமான டிக்கெட்டின் நகல்.
இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
கூடுதலாக, நீங்கள் உங்கள் தூதரகத்திலிருந்து பயண ஆவணத்தைப் பெற வேண்டும். பொதுவாக பாஸ்போர்ட்டை இழந்த குடிமக்களுக்கு தூதரகங்களால் வழங்கப்படுகின்றன. எனவே,EXIT PERMIT விண்ணப்பிக்கும் முன் உங்கள் நாட்டின் தூதரகத்தை நீங்கள் அணுக வேண்டும்.

ADVERTISEMENT

ICP மூலம் ஆன்லைனில் நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான வழிகள்:

குறிப்பிட்டுள்ள இணையதளத்தை பார்வையிடவும்: https://icp.gov.ae/en/service/issue-exit-permit/
‘Start service’ என்பதைக் கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தில் பின்வரும் தகவல்களை நிரப்பவும்:
முழு பெயர்
மின்னஞ்சல் முகவரி
தொலைபேசி எண்
பிறந்த தேதி
பாஸ்போர்ட்டை தொலைத்த நீங்கள், EXIT PERMIT-ஐ பெற தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, வெளியேறும் அனுமதிக்கான மின்னணு முறையில் உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்.
உங்கள் விண்ணப்பத்தின் நிலையைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும் வகையில் உங்கள் தொலைபேசி எண் அல்லது மெயிலுக்கு SMS ஒன்று வரும்.
EXIT PERMIT பெற விண்ணப்பப் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், செயல்முறை முடிந்தது என்று உங்களுக்குத் தெரிவிக்கும் புதுப்பிப்பைப் பெறுவீர்கள்.

கட்டணம்:

REQUEST FEES: 100 திர்ஹம்ஸ்
ISSUE FEES: 100 திர்ஹம்ஸ்
மின்னணு சேவை கட்டணம்: 50 திர்ஹம்ஸ்

GDRFA:

நீங்கள் துபாயில் வசிப்பவராக இருந்தால், நீங்கள் GDRFA உடன் வெளியேறும் அனுமதியை வழங்க வேண்டும், ஆனால் செயல்முறைக்கு விண்ணப்பிக்க, நீங்கள் GDRFA சேவை மையம் அல்லது AMER மையத்தை அணுக வேண்டும்.
நீங்கள் AMER மையத்திற்குச் செல்லும்போது, ​​ EXIT PERMIT பெற விண்ணப்பத்தைக் கோர வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, சேவை அதிகாரியிடம் தேவையான ஆவணங்களை இணைத்து, நீங்கள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

AMER சேவை மையத்திற்கு கட்டணம்:

சேவை கட்டணம்: 200 திர்ஹம்ஸ்.
ஒரு பரிவர்த்தனைக்கு 20 திர்ஹம்ஸ்.
கலெக்ஷன் கமிஷன்: நிறுவனங்களுக்கு 50 திர்ஹம்ஸ் மற்றும் தனிநபர்களுக்கு 15 திர்ஹம்ஸ்.
AMER மையங்கள் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டால், 100 திர்ஹம்ஸ் கட்டணம் சேர்க்கப்படும்.