ADVERTISEMENT

துபாயில் 100 திர்ஹம்ஸுக்கும் குறைந்த விலையில் PCR பரிசோதனை செய்ய வேண்டுமா..? விபரம் உள்ளே.!

Published: 16 Jun 2022, 8:32 PM |
Updated: 16 Jun 2022, 8:32 PM |
Posted By: admin

அமீரகத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது, மேலும் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் Al Hosn கிரீன் பாஸ் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களிலிருந்து 14 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. Al Hosn செயலியில் கிரீன் பாஸ் வைத்திருக்க ஒவ்வொரு 14 நாட்களுக்கும் PCR சோதனையை எடுக்க வேண்டும் என்று தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையமான (NCEMA) அறிவித்தது.

தற்போது அமீரகத்தில் கொரோன தொற்று அதிகரித்து வரும் நிலையில், துபாயில் 100 திர்ஹம்ஸுக்கும் குறைவான கட்டணத்தில் PCR பரிசோதனை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி துபாயில் எங்ககெல்லாம் 100 திர்ஹம்ஸுக்கு குறைவான கட்டணத்தில் PCR பரிசோதனை செய்யப்படுகிறது என்பதை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

ADVERTISEMENT
  • அல் கவானீஜ் மற்றும் Dubai Parks and Resorts உள்ள SEHA டிரைவ்-த்ரூ மையங்களில் PCR சோதனைக்கு 40 40 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகின்றன.
  • NMC ராயல் மருத்துவமனையில், துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் (டிஐபி)யில் குடியிருப்பளர்கள் பயணம் செய்ய டிக்கெட்டைத் காண்பித்தால் 85 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகிறது. மற்றபடி, விலை 120 திர்ஹம்ஸ்.
  • Aster Hospital, Cedars, Jebel Ali, Aster Hospital, Mankhool இல் 60 திர்ஹம்ஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, Aster Hosptal, Qusais Dh99, Aster Hospital, Sonapur இல் ஒரு பரிசோதனைக்கு 50 திர்ஹ்ம்ஸ் செலவாகும். ஆஸ்டர் கிளினிக்கில் (AJMC)-யில் 99 திர்ஹம்ஸ் மற்றும் Rolla மற்றும் Muweilah-வில் 59 திர்ஹ்ம்ஸ் ஆகும்.
  • அல் குவோஸ் மாலில் உள்ள ரைட் ஹெல்த் பிசிஆர் சோதனை மையத்தில் 90 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகிறது.
  • Rizek மொபைல் ஆப் மூலம் வீட்டில் பரிசோதனை செய்ய 99 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படும், அதே நேரத்தில் அர்பன் நிறுவனத்தின் வழக்கமான PCR சோதனைக்கு 24 மணிநேரத்தில் முடிவுகளுடன் 84 திர்ஹம்ஸ் செலவாகும்.