ADVERTISEMENT

UAE: வாகனங்களுக்கு எளிதாக எரிபொருள் நிரப்ப 10 புதிய eLINK நிலையங்களைத் திறக்கும் ENOC நிறுவனம்..!

Published: 17 Jun 2022, 8:21 AM |
Updated: 17 Jun 2022, 8:21 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கான டிஜிட்டல் மொபைல் எரிபொருள் விநியோக சேவையை வழங்கிவரும் Enoc நிறுவனம், eLink நிலையங்களுக்கான புதிய விரிவாக்கத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. eLink நிலையம் என்பது வாகன ஓட்டிகள் மற்றும் வாடிக்கையாளருக்கு எளிய முறையில் வசதியான எரிபொருள் சேவைகளை வழங்கும் ஒரு மொபைல் எரிபொருள் திட்டமாகும்.

ADVERTISEMENT

2022 ஆம் ஆண்டு முடிவிற்குள் அமீரகத்தில் பத்து புதிய eLink நிலையங்களைத் திறக்க ENOC நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமீரகத்தில் தற்போது ஏழு eLink நிலையங்கள் உள்ளன, ஐந்து துபாயிலும் இரண்டு அபுதாபியிலும் உள்ளன. eLink அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 100,000 வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது, இதன் மொத்த எரிபொருள் அளவு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் ஆகும்.

இது தொடர்பாக ENOC நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சைஃப் ஹுமைத் அல் ஃபலாசி கூறியதாவது: “eLink நிலையங்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள், அமீரகத்தின் எரிபொருள் உள்கட்டமைப்பை மேலும் புதுமையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளுடன் வலுப்படுத்த உள்ளோம். துபாய் மற்றும் அபுதாபி முழுவதும் தொடங்கப்பட்ட புதுமையாக வடிவமைக்கப்பட்ட eLink நிலையங்களுக்கு பெரும் வரவேற்பி கிடைத்துள்ளது, மேலும் புதிய நிலையங்கள் கூடுதலாக வாகன ஓட்டிகளுக்கு எளிதான மற்றும் வசதியான எரிபொருள் அணுகலை வழங்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

ADVERTISEMENT

மொபைல் எரிபொருள் வடிவமாக வடிவமைக்கப்பட்ட அமீரக குடியிருப்பாளர்களின் தேவைகளின் அடிப்படையில், எரிபொருள் நிலையத்தில் நேரங்களை வரிசையில் காத்திருக்காமல் எரிபோருள் தேவையை eLink நிலையங்கள் மூலம் பெற்று மாற்றங்களைப் பொறுத்து, அந்த இடத்திலேயே வேறு இடத்திற்கு எளிதாக இடமாற்றம் செய்யலாம். ENOC லிங்கின் eLink நிலையங்கள் 5,000 முதல் 30,000 லிட்டர் தொட்டி வரையிலான பல்வேறு டேங்க் கொள்ளளவைக் கொண்டுள்ளன, மேலும் ஒரே நேரத்தில் நான்கு வாகனங்களுக்கு எரிபொருளை வழங்க முடியும், இதனால் எரிபொருளுக்காக நேரத்தை செலவடாமல் வரிசையில் நிற்பதை குறைக்கலாம்.

eLink நிலையம் முழு நிலையானது, சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் சேமிப்பு தொட்டிகளில் இருந்து ஏற்றும் போது உமிழ்வைக் குறைக்க நீராவி மீட்பு அமைப்புகளை உள்ளடக்கியது. இது பயோடீசல் மூலம் இயக்கப்படுகிறது, LED டிஜிட்டல் திரைகள் மற்றும் விளக்குகள் மற்றும் ஸ்மார்ட் மீட்டர், கிளவுட் இணைப்பு, GPS கண்காணிப்பு மற்றும் RFID தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இவ்வாறு ENOC நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சைஃப் ஹுமைத் அல் ஃபலாசி கூறினார்.