ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதா ஜூலை 9-ஆம் தேதி வரக்கூடும்.. வானியல் குழு கணிப்பு..!

Published: 23 Jun 2022, 11:52 AM |
Updated: 23 Jun 2022, 11:52 AM |
Posted By: admin

வானியல் கணக்கீடுகளின்படி இஸ்லாமிய மாதமான துல் ஹஜ், ஜூன் 30 வியாழன் அன்று தொடங்க இருப்பதாகவும், துல் ஹஜ் 10 (ஜூலை 9) அன்று ஈத் அல் அதா (பெருநாள்) தினமாக இருக்கும் என்றும் அமீரக வானியல் குழு தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் துல் ஹஜ் 9 அன்று அரஃபா தினமாக கடைப்பிடிப்பது வழக்கம். அன்றைய தினப் வெள்ளிக்கிழமை ஜூலை 8-ஆம் தேதியாக இருக்கும் என்று வானியல் குழுவின் தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வான் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு பெருநாள் பண்டிகைக்காக நான்கு நாள் விடுமுறை கிடைக்கும். அதாவது அரஃபா நாள் மற்றும் ஈத் அல் அதாவின் மூன்று நாட்கள் ஆகும். மேலும் வானியல் கணக்கீடுகளின்படி, இந்த விடுமுறைகள் ஜூலை 8 வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 11 திங்கள் வரை இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த விடுமுறை நாட்களில் அமீரகத்தில் பணிபுரியும் வெளிநாட்டினர் தாயகம் செல்வதால், பயண டிக்கெட் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT