ADVERTISEMENT

துபாய் புர்ஜ் கலிஃபாவின் உச்சிக்கு இலவசமாக செல்ல ஆசையா..? அப்போ உடனே முன்பதிவு செய்யுங்க..!

Published: 29 Jun 2022, 10:37 AM |
Updated: 29 Jun 2022, 10:37 AM |
Posted By: admin

துபாய்க்கு வருகைத்தர விரும்பும் பயணிகள், ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கான இலவச டிக்கெட்டுகளைப் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் இந்த ஆஃபரானது, துபாயின் முதன்மை கேரியரில் தங்கள் விமானங்களை முன்பதிவு செய்யும் பயணிகள் At The Top, Burj Khalifa, The Dubai Fountain Boardwalk and Louvre Abu Dhabi ஆகிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல இலவசமாக டிக்கெட்டுகளை பெறுவார்கள்.

ADVERTISEMENT

“வருடா வருடம் மில்லியன் கணக்கான மக்கள் இந்த சுற்றுலா தலங்களுக்கு வருகை தருவதால், பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ளது. எனவே துபாய்க்கு விமானங்களை முன்பதிவு செய்து, ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை At The Top, Burj Khalifa, the Dubai Fountain Boardwalk மற்றும் Louvre Abu Dhabi ஆகிய மூன்று இடங்களுக்கு இலவச டிக்கெட்டைகளை பெற்று மகிழலாம்” என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் தெரிவித்துள்ள விமான நிறுவனம், கோடை விடுமுறை நெருங்கி வருவதால் விமானத்தில் தினசரி முன்பதிவுகள் அதிகரித்து வருகின்றன, ஆகையால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற தேதிகள் மற்றும் விமானத்தை உறுதிப்படுத்த தங்களது இருக்கைகளை முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இலவச டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலவச டிக்கெட்டுகளைப் பெற விரும்பும் பயணிகள் emiratesoffer@emirates.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்ப வேண்டும், மேலும் முன்பதிவுக் குறிப்பு எண், வருகைத் தேதி, பயணிகளின் பெயர், தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் முகவரி ஆகியவற்றை அனுப்பி இலவச நுழைவுச்சீட்டை பெறலாம்.