ADVERTISEMENT

UAE: உலகின் சிறந்த ஈர்ப்புமிக்க இடத்திற்கான பட்டியலில் அபுதாபி ஷேக் சயீத் கிராண்ட் மசூதி தேர்வு..!

Published: 29 Jun 2022, 12:00 PM |
Updated: 29 Jun 2022, 12:00 PM |
Posted By: admin

2022 ஆம் ஆண்டில் டிரிப் அட்வைசர் ஆய்வுக்குழுவின் தரவரிசைப்படி, ஷேக் சயீத் கிராண்ட் மசூதி உலகின் சிறந்த சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக பெயர் பெற்றுள்ளது. சமீபத்தில் வெளீயிடப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான டிராவலர்ஸ் சாய்ஸ் விருதுகளின் “டாப் அட்ராக்ஷன்ஸ்” துணைப் பிரிவில் அபுதாபி ஷேக் சயீத் கிராண்ட் மசூதி முதலிடத்தையும், உலகளவில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

ADVERTISEMENT

இது பயணிகளின் மதிப்புரைகளின் தரம் அடிப்படையிலான அனுபவங்கள், சுற்றுப்பயணங்கள், செயல்பாடுகள் மற்றும் இடங்களுக்கான மதிப்பீடுகளின் படி கணக்கிடபடப்பட்டுள்ளது. மேலும் ஷேக் சயீத் கிராண்ட் மசூதி “சிறந்த கலாச்சார மற்றும் வரலாற்று சுற்றுப் பயணங்கள்” துணைப் பிரிவில் உலகளவில் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இது குறித்து டிரிப் அட்வைசர் ஆய்வுக்குழு கூறுகையில், “உலகளாவிய சுற்றுலா வரைபடத்தில் ஒரு முக்கிய கலாச்சார அடையாளமாக இந்த ஷேக் சயீத் கிராண்ட் மசூதி இடம் பெற்றுள்ளது, அதே போல் உலகின் வழிபாட்டுத் தலங்களுக்கிடையில் தனித்து நிற்கும் கட்டிடமாகவும் திகழ்கிறது. மேலும் இஸ்லாமிய கலாச்சாரம் தொடர்பான தனித்துமிக்க திட்டங்கள், செயல்பாடுகள், முன்முயற்சிகள் மற்றும் அனுபவங்களை வழங்குவதோடு, உன்னதமான மதிப்புகள் மற்றும் கொள்கைகள் பற்றிய விழிப்புணர்வுகளை வழங்குவதில் ஐக்கிய அரபு அமீரகம் முன்னொடியாக உள்ளது” என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT

“ஷேக் சயீத் கிராண்ட் மசூதி, ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் பல்வேறு திறமையான பணியாளர்களால் இயக்கப்படுகிறது, பார்வையாளர்களுக்கு அரபு மற்றும் ஆங்கிலத்தில் நிபுணர்களால் வழங்கப்படும் கலாச்சார சுற்றுப்பயணங்கள் குறித்த விவரங்கள் உட்பட அற்புதமான அனுபவத்தை இந்த மசூதியில் அமைப்பினர் வழங்கி வருகின்றனர்” என்று டிரிப் அட்வைசர் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.