ஈரானில் ரிக்டர் 6.3 அளவில் பதிவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமையான இன்று அதிகாலை நிலநடுக்கத்தை குடியிருப்பாளர்கள் உணர்ந்தனர்.
இந்த நிலநடுக்கத்தை அமீரக குடியிருப்பாளர்கள் உணர்ததாக சமூக ஊடகங்களில் மக்கள் தெரிவிக்கின்றனர். தேசிய வானிலைஆய்வு மையம் (NCM) படி, நிலநடுக்கம் தெற்கு ஈரானில் அதிகாலை 1.32 மணிக்கு 10 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளது. இந்த நடுக்கம்ஐக்கிய அரபு அமீரகத்தில் உணரப்பட்டதாகவும், ஆனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் NCM உறுதிப்படுத்தியது. இந்நிலையில் பல குடியிருப்பாளர்கள் நிலநடுக்கத்தால் தங்களது வீட்டிற்குள் ஏற்பட்டவற்றையும் மற்றும் அதன் தாக்கத்தின்வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.