ADVERTISEMENT

அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு சூப்பர் நியூஸ்.. நம்ம ஊரு சுவையான உணவை அறிமுகப்படுத்திய தும்பே ஃபுட் கோர்ட்..!

Published: 5 Jul 2022, 12:42 PM |
Updated: 5 Jul 2022, 12:43 PM |
Posted By: admin

அஜ்மானின் அல் ஜுர்ஃப் நகரில் உள்ள தும்பே மெடிசிட்டியில் அமைந்துள்ள தும்பே ஃபுட் கோர்ட், பல்வேறு வகையான உலகளாவிய உணவு வகைகளை வழங்கி வருகிறது. மேலும் மக்களுக்கு இட்லி, வடை, தோசை மற்றும் பலவிதமான சுவையான சாப்பாட்டு உணவு வகைகளை வழங்குவதை உணவகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

தும்பே குழுமத்தின் இயக்குநர் ஃபர்ஹத், “சைவ உணவகம் கொண்டுவர காரணம், மாணவர்கள், நோயாளிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என பலவகையான மக்கள் இங்கு வருகிறார்கள். அவர்களுக்கு ருசியான, பலவகையான உணவுகளை வழங்கும் ஒரு முழுமையான உணவகமாக நாங்கள் மாற விரும்புகிறோம்”என்று தெரிவித்தார்.

இந்த வளாகத்தில் ஆறு உணவகங்கள் உள்ளன. இவற்றில் இந்திய, அரபு, சீன மற்றும் கான்டினென்டல் உணவு வகைகள் கிடைக்கின்றன. இந்த ஃபுட் கோர்ட்டில் விஐபி சாப்பாட்டு பகுதி மற்றும் பார்ட்டி ஹால் உள்ளன. மேலும் பல்வேறு ஆன்லைன் டெலிவரி தளங்களான தலபாத், ஜோமேட்டோ ஆகியவற்றிலும் இந்த ஃபுட் கோர்ட் பட்டியலிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT