ADVERTISEMENT

UAE: ஹஜ் செய்துவிட்டு அமீரகம் திரும்பும் யாத்திரிகள் 7 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள NCEMA உத்தரவு..!

Published: 5 Jul 2022, 6:31 PM |
Updated: 5 Jul 2022, 6:31 PM |
Posted By: admin

ஹஜ் முடித்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகைத்தரும் யாத்திரிகள் முதல் ஏழு நாட்களுக்கு தங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்கவும், அவர்கள் வந்து சேர்ந்த நான்காவது நாள் அல்லது ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயமாக கோவிட் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று NCEMA தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NCEMA) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், யாத்திரிகள் நெகடிவ் முடிவைப் பெற்ற பிறகு அல் ஹோஸ்ன் செயலியில் கிரீன் நிறத்தை பெறுவார்கள்.  யாத்திரிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான நிலையங்களில் கோவிட் PCR பரிசோதனையை மேற்கொள்ள விருப்பம் உண்டு. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் சுகாதார மையத்திற்கு தெரிவிக்கவும், தொற்று உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தவும் கூறப்பட்டுள்ளது.