ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முஸ்லிம்கள் ஜூலை 9 ஆம் தேதி மசூதிகள் மற்றும் திறந்தவெளி வழிபாட்டுத் தலங்களில் ஈத் அல் அதா சிறப்பு தொழுகைக்கு பங்கேற்க நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகம் முழுவதும் ஈத் தொழுகைக்கான நேர பட்டியல் இதோ:
- அபுதாபியில் காலை 5.57 மணி
- அல் ஐனில் காலை 5.51 மணி
- மதினத் சயீதில் காலை 6.02 மணி
- துபாயில் காலை 5.53 மணி
- ஷார்ஜாவில் காலை 5.52 மணி
- அஜ்மானில் காலை 5.52 மணி
அமீரகத்தில் உள்ள அதிகாரிகள் ஈத் அல் அதாவின் முதல் நாளில் வழிபாட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளனர். அதன்படி, குத்பா மற்றும் தொழுகை நேரம் 20 நிமிடங்களுக்கு நடைபெறும் என்றும் வழிபடுபவர்கள் முகக்கவசங்களை அணிந்து ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.