ADVERTISEMENT

UAE: துபாய் புர்ஜ் கலிஃபாவின் உச்சிக்கு சென்று நகரத்தின் அழகை ரசிக்க குடியிருப்பளர்களுக்கு அதிரடி சலுகை..!

Published: 21 Jul 2022, 1:41 PM |
Updated: 21 Jul 2022, 1:41 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் புர்ஜ் கலீஃபாவின் 124 மற்றும் 125வது மாடியில் இருந்து பிரம்மிக்க வைக்கும் துபாய் நகரத்தின் அழகை 60 திர்ஹம்ஸில் கண்டு ரசிக்கலாம். இது வழக்கமான டிக்கெட்டின் விலையில் பாதிக்கும் குறைவானதாகும். அமீரகத்தில் வரவிருக்கும் அனைத்து பொது விடுமுறை நாட்களையும் சேர்த்து செப்டம்பர் 30, 2022 வரை கோடைகால சிறப்புச் சலுகையாக இந்த விலை குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சலுகையைப் பெற, பார்வையாளர்கள் தங்களின் எமிரேட்ஸ் ஐடியை டிக்கெட் கவுன்டர்களில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் புர்ஜ் கலீஃபாவின் atthetop.ae இணையதளம் மூலம் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த உயர்ந்த சிறப்பு சலுகையின் மூலம் நகரத்தை வெவ்வேறு கோணங்களில் காணலாம்.