ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய ரயில்வேயில் பயணிக்க இருக்கும் பயணிகள் மிகவும் வசதியாக ஸ்டேஷனில் இருந்து தங்கள் இறுதி இலக்கை அடைவதை உறுதி செய்வதற்காக “Door TO Door” சேவை வழங்கப்படும் என்று எதிஹாட் ரயிலின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எதிஹாட் ரெயிலின் பயணிகள் துறையின் நிர்வாக இயக்குநர் அஹ்மத் அல் முசாவா அல் ஹஷேமி கூறுகையில், ரயில்வே, அனைத்து போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, பயணிகளின் வீடு, வேலை செய்யும் இடம் அல்லது சுற்றுலாத் தலம் என அவர்கள் இறுதி இலக்கை அடையும் வரை பொதுப் போக்குவரத்து பயன்பாட்டில் இருக்கும்.
“இந்த எதிஹாட் பயணிகள் ரயிலானது, அல் ருவைஸ், அல் மிர்ஃபா, துபாய், ஷார்ஜா, அல் தைத் மற்றும் அபுதாபி உட்பட ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் சிலாவிலிருந்து ஃபுஜைரா வரையிலான 11 நகரங்கள் மற்றும் பிராந்தியங்களை இணைக்கும். ஒவ்வொரு ரயிலிலும் 400க்கும் மேற்பட்ட பயணிகள் அமரும் வசதியும், மணிக்கு 200 கி.மீ வேகத்தில் செல்லும் வசதியும் உள்ளது. பயணிகள் அபுதாபியில் இருந்து துபாய்க்கு 50 நிமிடங்களிலும், அபுதாபியில் இருந்து ஃபுஜைராவிற்கு 100 நிமிடங்களிலும் பயணிக்கலாம். மேலும் 2030 ஆம் ஆண்டில், ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 36.5 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்றார்.
மேலும் கூறிய இயக்குநர் அஹ்மத் அல் முசாவா அல் ஹஷேமி, “ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய இரயில் வலையமைப்பு GCC ரயில்வே திட்டத்தை நிறைவு செய்து, அதன் மூலம் சவூதி அரேபியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு தடையற்ற ரயில் இணைப்பை உறுதி செய்யும்” என்றார்.