அமீரகத்தின் கோர்ஃபக்கான் சாலை மற்றும் கோர்ஃபக்கான் நோக்கிய பகுதிகள் ஒரு மாதத்திற்கு மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஷார்ஜா சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம், கோர்ஃபக்கான் சாலை மூடப்படுவதால், ஓட்டுநர்கள் மாற்று வழியில் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளது, இந்த முடலானது ஜூலை 26 செவ்வாய் முதல் ஆகஸ்ட் 25 வியாழன் வரை மூடப்படும் என்று SRTA அறிவித்துள்ளது.
ஷார்ஜாவில் சாலைகளின் மேம்பாட்டை நிறைவு செய்வதற்கும் செயல்திறனை அதிகரிப்பதற்கும் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். கோர்ஃபக்கான் சாலையில் பயணிக்கும் குடியிருப்பாளர்கள், குறிப்பிட்டுள்ள மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, போக்குவரத்து பலகைகளின் அடையாளங்களைப் பின்பற்றுமாறும் கூறப்பட்டுள்ளது.