அமீரகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அல் ஐன், அபுதாபி மற்றும் ஹட்டாவில் மழை பெய்ததாகவும், அதே நேரத்தில் துபாயின் சில பகுதிகளில் தூறல் மழை பெய்ததாகவும் தெரிவித்துள்ளது. அது போன்று ஃபுஜைரா, ராஸ் அல் கைமாவிலும் மழை செய்து வருகிறது. வானிலை அறிக்கையின்படி, சனிக்கிழமை வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை கிழக்கு நோக்கிப் பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
மேலும் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பிருப்பதாகவும் கடல்கள் சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும், அலைகளின் உயரம் 8 அடி வரை உயரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறும், மின்னணு தகவல் பலகைகளில் காட்டப்படும் வேக வரம்புகளை கடைப்பிடிக்கவும் அபுதாபி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.