ADVERTISEMENT

அமீரக வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. ஆகஸ்ட் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!

Published: 1 Aug 2022, 8:07 AM |
Updated: 1 Aug 2022, 8:07 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அமீரக எரிபொருள் விலைக் குழு (The UAE fuel price committee) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
  • ஆகஸ்ட் 1 முதல் சூப்பர் 98 பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.03 திர்ஹம்ஸாக குறைந்துள்ளது. ஜூலை மாதம் சூப்பர் 98 பெட்ரோல் லிட்டருக்கு 4.63 திர்ஹம்ஸாக இருந்தது.
  • ஸ்பெஷல் 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.92 திர்ஹம்ஸாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஜூலையில் 4.52திர்ஹம்ஸாக இருந்தது.
  • இ–பிளஸ் 91 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.84 திர்ஹம்ஸாக குறைந்துள்ளது. ஜூலை மாதம் இ–பிளஸ் 91 பெட்ரோல் லிட்டருக்கு 4.44 திர்ஹம்ஸாக இருந்தது.
  • டீசல் விலை லிட்டருக்கு 4.13 திர்ஹம்ஸாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஜூலையில் 4.76 திர்ஹம்ஸாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.