துபாயில் உள்ள டிராகன் மார்ட் அருகே பெரும் தீ விபத்து ஏற்பட்டது. டிராகன் மார்ட் வெளியில் இருந்த குப்பைத் தொட்டி மற்றும் மூன்று கார்களில் ஏற்பட்ட தீ சுற்றியுள்ள இடத்திற்கு பரவியது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று சிவில் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது. தீ விபத்து குறித்து, துபாய் குடிமைத் தற்காப்புத் துறைக்கு மாலை 5 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஐந்து நிமிடங்களுக்குள் தீ அணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரனையை அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.