ADVERTISEMENT

UAE: ‘ஹலோ, ஷேக் ஹம்தான் பேசுறேன்’.. டெலிவரி மேனை தொடர்புக்கொண்டு வீடியோ காலில் பாராட்டிய துபாய் இளவரசர்..!

Published: 1 Aug 2022, 1:26 PM |
Updated: 1 Aug 2022, 1:26 PM |
Posted By: admin

துபாயின் பரபரப்பான போக்குவரத்து சாலையில் கிடந்த இரண்டு கான்கிரீட் கற்களை தலாபத்தில் பணிபுரியும் டெலிவரி பாய் ஆன பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் கஃபூர் அகற்றி துபாய் இளவரசர் ஷேக் ஹம்தானிடம் வீடியோ கால் மூலம் பாராட்டைப் பெற்றார்.

ADVERTISEMENT

இது குறித்து அப்துல் கஃபூர் கூறுகையில், “என்னைப் போன்ற சாதாரண நபரிடம் இளவரசர் பேசியதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் உண்மையில் ஒரு சிறந்த தலைவர்” என்றார்.

ADVERTISEMENT

சாலையில் இருந்த கற்களை அப்துல் கஃபூர் அகற்றும் வீடியோ சமூக வலதளைத்தில் வைரலாகி, இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் கவனத்தை ஈர்த்தது. இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இளவரசர் கஃபூருக்கு நன்றி தெரிவித்துள்ளார், பின்னர் வீடியோ கால் மூலம் தொடர்புக்கொண்டு பாராட்டிகளை தெரிவித்து, கஃபூரை நேரில் சந்திப்பதாகவும் உறுதியளித்தார்.