ஐக்கிய அரபு அமீரகத்தில் இடைவிடாத மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஜூலை 28 அன்று நிறுத்தப்பட்ட ஃபுஜைரா மற்றும் கல்பாவிற்கான பயணிகள் போக்குவரத்து சேவைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. ஷார்ஜாவின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை கிழக்குப் பகுதிகளுக்கான பயணிகள் போக்குவரத்து சேவையை கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
தற்போது மழை தண்ணீர் குறைந்துள்ளதால், நேற்று அதிகாரிகள் இந்த மூடப்பட்ட சாலைகளை திறந்தனர். அதாவது, இன்டர்சிட்டி பேருந்துகளான 611 பாதை (ஷார்ஜா-ஃபுஜைரா-கல்பா) வழியாக ஃபுஜைரா மற்றும் கல்பாவுக்கு பயணிகள் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 116 ஷார்ஜா-ஃபுஜைரா-கோர்ஃபக்கான் வழியாக ஃகோர்பக்கான் வரையிலான போக்குவரத்து சேவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஃபுஜைராவில் உள்ள ஒரு முக்கிய சாலையான ஃபுஜைரா-கித்பா ரிங் ரோடு இரண்டு நாட்கள் மூடலுக்குப்பின் மீண்டும் திறக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அல் குரைய்யா பகுதிக்கு செல்லும் பிரதான சாலை மறு அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளது.