அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் (VPNs) பயன்பாடு அதிகரித்து வருவதால் தடைசெய்யப்பட்ட வலைதளங்களை இயக்கவும் பதிவிறக்கம் செய்வதற்கும் வழிவகுக்கிறது. சமீபத்திய நோர்ட் செக்யூரிட்டி தரவுகளின்படி, வளைகுடா பிராந்தியங்களில் VPNகளுக்கான தேவை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அமீரகத்தில் VPNகளுக்கான தேவை அதிகரித்துவிட்ட நிலையிலும், அதிகமான இணைய பயனர்கள் தடைசெய்யப்பட்ட இணையளத்தையே பார்வையிடுகின்றனர்.
இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையமான (TDRA) நிர்வாகப் பங்குதாரரான ஆஷிஷ் மேத்தா கூறுகையில், வழிகாட்டுதல்களின்படி அமீரகத்தில் VPN பயன்படுத்துவது சட்டவிரோதமானது அல்ல.
ஆகஸ்ட் 1, 2016 அன்று ஒரு அறிக்கையில் TDRA குறிப்பிட்டுள்ளதாவது, VPNகளை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். ஆனால், அதனை சட்டவிரோதமான வழிமுறைகளுக்குப் பயன்படுத்துவது சட்டம் எண் (34) 2021-இன் கீழ் கடுமையான குற்றமாகும்.
மேலும், ஐக்கிய அரபு அமீரக அரசால் தடுக்கப்பட்ட இணையதளங்கள், அழைப்பு, கேமிங் அப்ளிகேஷன்களுக்கான அணுகலைப் பெற IP அட்ரெஸை மறைத்து VPN-ஐப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.
இது சட்டத்தின் 10வது பிரிவின் கீழ், VPNகளை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் 500,000 முதல் 2 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மேத்தா கூறினார்.