ஆகஸ்ட் மாதம் அமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டதை அடுத்து, ஷார்ஜா தனது டாக்ஸி கட்டணங்களை திரும்பப் பெற்றுள்ளது. டாக்சிகளுக்கான குறைந்தபட்சக் கட்டணம் 17.50 திர்ஹம்ஸில் இருந்து 15.50 திர்ஹம்ஸாக குறைந்துள்ளது என்று ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (SRTA) தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) நாட்டின் சமீபத்திய எரிபொருள் விலையின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் அதன் டாக்ஸி கட்டணங்களை நிர்ணயம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து 13.50 திர்ஹம்ஸில் இருந்து 17.50 திர்ஹம்ஸ் ஆக அதிகரித்தது.
எரிசக்தி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு ஏற்ப டாக்ஸி மீட்டர் கட்டணம் அதிகரிக்கப்ப்டவும் குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது, தற்போது எரிபொருள் விலையை தாராளமயமாக்கும் கொள்கையின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று SRTA இன் தலைவர் யூசுப் காமிஸ் அல் உஸ்மானி கூறினார். .
ஜூலையில் 4.63 திர்ஹம்ஸுக்கு இருந்த Super 98 பெட்ரோல், ஆகஸ்ட் மாதத்தில் 4.03 திர்ஹம்ஸ் ஆகவும், ஜூலை மாதத்தில் 4.52 திர்ஹஸாக இருந்த ஸ்பெஷல் 95 பெட்ரோல், ஆகஸ்டில் 3.92 திர்ஹம்ஸ் ஆகவும் குறைந்துள்ளது.