ADVERTISEMENT

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிரடி விமான டிக்கெட் சலுகை..!! ஏர் இந்தியா அறிவிப்பு..!!

Published: 8 Aug 2022, 8:54 PM |
Updated: 9 Aug 2022, 7:43 AM |
Posted By: admin

இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா வரவிருக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியாவிற்கு பயணம் செய்யும் GCC பயணிகளுக்கு சிறப்பு சுதந்திர தின சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. “ஒன் இந்தியா ஒன் ஃபேர்” என்ற முன்முயற்சியின் கீழ், அனைத்து வளைகுடா நாடுகளின் விமான நிலையங்களிலிருந்தும் (ஓமான் தவிர) இந்தியாவில் உள்ள எந்த இடத்துக்கும் அனைத்து நேரடி விமானங்களிலும் ஒரு வழி பயண டிக்கெட் கட்டணத்தில் கவர்ச்சிகரமான சலுகையை விமான நிறுவனம் வழங்குகிறது.

ADVERTISEMENT

இந்த சலுகையின் படி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை, கொச்சி உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கான விமான டிக்கெட்டுகளுக்கு, பயணிகளுக்கு 330 திர்ஹம்கள் என்ற அளவில் குறைவான கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 21, 2022 வரை விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பயணிகள் இந்தச் சலுகையைப் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், அக்டோபர் 15, 2022 வரையிலான பயணத்திற்கான ப்ரொமோஷன் காலத்தில் விற்கப்படும் அனைத்து டிக்கெட்டுகளிலும் 35 கிலோ இலவச பேக்கேஜ் அலவன்ஸ் மற்றும் 8 கிலோ ஹாண்ட் பேக்கேஜ் அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சிறப்புக் கட்டணங்கள் சீசன் நேரத்தில் பயணிகளை எளிதாக்கும் நோக்கில் ஏர் இந்தியா இணையதளம்/மொபைல் ஆப் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டிராவல் ஏஜென்ட்கள் மூலம் கிடைக்கும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் வரையறுக்கப்பட்ட இருக்கைகள், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனமானது அனைத்து வளைகுடா நிலையங்களிலிருந்தும் ஒரே நேரத்தில் இந்தியாவிற்கு இதுபோன்ற சிறப்பு சலுகையை வழங்குவது இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

விற்பனை செல்லுபடியாகும் காலம்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 21, 2022

ப்ரொமோஷன்: அக்டோபர் 15, 2022 வரை பயணம் செய்ய செல்லுபடியாகும்