மாண்புமிகு துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது சாகசங்கள், உத்தியோகபூர்வ ஈடுபாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து அதற்கென தனி ரசிகர்களை பெற்றவர். அதன் படி, இன்ஸ்டாகிராமில் துபாய் இளவரசர் இந்திய புகைப்பட கலைஞரான நிஷாஸ் எடுத்த புகைப்படம் ஒன்றை லைக் மற்றும் கமெண்ட் செய்துள்ளார்.
இது குறித்து நிஷாஸ், கடந்த வாரம் தனது பணி முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, இன்ஸ்டாகிராமில் ஷேக் ஹம்தான் கமெண்ட் செய்துருப்பதை கண்டதும் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை, இன்ஸாட்கிராமை குறைந்தது 20 முறை சரிபார்த்து, அது போலியான கணக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். ஷேக் ஹம்தான் எனது புகைப்படத்தை லைக் மற்றும் கமெண்ட் செய்துருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
இது போன்று, அல்தமாஷ் என்ற பாகிஸ்தான் புகைப்படக் கலைஞரின் புகைப்படங்களையும் கடந்த காலங்களில் ஷேக் ஹம்தான் பலமுறை லைக் மற்றும் கருத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.